அரிசியின் விலையை அதிகரிக்காவிட்டால் உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து விலக நேரிடும்!

27.09.2021 06:07:48

அரிசியின் விலை அதிகரிக்கப்படாதவிடத்து எதிர்வரும் நாட்களில் உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து விலக நேரிடும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்த சங்கத்தின் தலைவர் சுராஜ் ஜயவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.

சகல அரிசி உற்பத்தியாளர்களும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

கீரி சம்பா அரிசிக்காக 160 ரூபா என்ற சில்லறை விலை பெற்றுத் தரப்பட வேண்டும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

இது குறித்து கருத்துரைத்த அந்த சங்கத்தின் செயலாளர் முதித் பெரேரா, அடிமட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், சகல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் அரிசியின் விலையை மாத்திரம் குறைத்து வழங்குவது பொறுத்தமற்றதெனவும் இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.