உலகின் மோசமான விமான நிறுவனங்களின் பட்டியலில் இண்டிகோ!

05.12.2024 07:56:48

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ (IndiGo), ஐரோப்பிய ஒன்றிய உரிமைகோரல் செயலாக்க நிறுவனமான ஏர்ஹெல்ப் (AirHelp) ஆல் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையில் உலகின் மோசமான விமான நிறுவனங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், விமான நிறுவனம் குறித்த அறிக்கையை முற்றாக நிராகரித்தது மற்றும் கணக்கெடுப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

ஏர்ஹெல்ப் அதன் அறிக்கையில், இண்டிகோவுக்கு 4.80 மதிப்பெண்களை வழங்கியது, பட்டியலில் உள்ள 109 விமான நிறுவனங்களில் 103 ஆவது இடத்தைப் பிடித்தது.

ஏர்ஹெல்ப் தரவரிசைகள் விமான நிறுவனங்களின் உரிய நேரத்திலின செயல்திறன், வாடிக்கையாளர் கருத்து மற்றும் இழப்பீடு கோரிக்கைகளை செயலாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளன.

தரவரிசையில் உள்ள மற்றைய ஒரேயொரு இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா 6.15 மதிப்பெண்களுடன் 61 ஆவது இடத்தில் உள்ளது.

அதேநேரம், பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் 8.12 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், கட்டார் ஏர்வேஸ் 8.11 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்திலும் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் 8.04 மதிப்பெண்களுடன் மூன்றாவதும் இடத்திலும் உள்ளன.

இந்தியாவின் மிகவும் விருப்பமான விமான நிறுவனமாக, IndiGo இந்த கணக்கெடுப்பினை மறுத்துள்ளது.

நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில், குறைந்த விலையில் மரியாதையான மற்றும் தொந்தரவு இல்லாத பயண அனுபவத்தை வழங்கியதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இண்டிகோவின் உள்நாட்டு சந்தைப் பங்கு 60 சதவீதத்தைத் தாண்டியுள்ளது மற்றும் 2023 ஆம் ஆண்டில் விமான நிறுவனம் 100 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கொண்டு சென்றது.

இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து பணிகயமும் (DGCA) இண்டிகோவின் கூற்றுகளை ஆதரிப்பதாக தெரிவிக்கின்றது.

இண்டிகோ 10,000 பயணிகளுக்கு வெறும் 0.2 சதம் முறைப்பாடுகளை மாத்திரம் பதிவு செய்துள்ளதாக ஒக்டோபர் விமானப் போக்குவரத்து அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இது நாட்டிலேயே குறைவான முறைப்பாடு அளிக்கப்பட்ட விமான நிறுவனங்களில் ஒன்றாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.