கல்கியின் எச்சரிக்கை!

04.07.2024 07:03:00

சென்னை: கல்கி 2898 ஏடி படத்தில் சிஜி காட்சிகளின் பிரம்மாண்டம், கடவுள் அவதாரம், மகாபாரத கதாபாத்திரங்கள், ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங், பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர், அன்னா பென், ராஜமெளலி என ஏகப்பட்ட நடிகர்கள் கேமியோக்கள் என தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ் பேக்கேஜ்களை வைத்து இயக்குநர் நாக் அஸ்வின் படத்தை ஹிட் ஆக்கி விட்டார். விஷுவல் ட்ரீட்டை தாண்டி கதை ரீதியாக உற்று நோக்கினால் ஒரு மிகப்பெரிய விஷயத்தையும் நாக் அஸ்வின் ரசிகர்களுக்காக வைத்திருக்கிறார். அது ஒரு எச்சரிக்கை மணி. கல்கி 2898 ஏடி படத்தில் மட்டுமில்லை பல ஹாலிவுட் படங்களிலும் இதே கருத்து சமீப காலமாக சொல்லபட்டுக் கொண்டே வருகிறது. இந்தியன் 2 செட்டில் கமல் ஹாசன் அப்படித்தான் இருந்தார்.. நடிகர் ஜெகன் பெருமிதம் ஆனால், மனிதர்கள் அதையெல்லாம் வெறும் ஃபிக்‌ஷன் என கடந்து செல்லாமல், நம் உலகில் உள்ள இயற்கை வளத்தை அழித்து விட்டு ஆக்ஸிஜன் மாஸ்க்குகளுடன் சுற்றித் திரியும் அளவுக்கு கொண்டு வந்து விடக் கூடாது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற கருத்தை உள்வாங்கிக் கொள்ளுதல் மிக மிக அவசியம். கங்கை வறண்டு விடுகிறது: புனித நதி என புராணங்களில் இருந்து போற்றப்பட்டு வந்த இந்தியாவின் மிகப்பெரிய வளமான கங்கை நதியை இப்போதே எந்தளவுக்கு அசுத்தம் செய்ய முடியுமோ செய்து அதை சாக்கடையாக மாற்றி விட்டனர். அந்த கங்கை காலப்போக்கில் வறண்டு போய்விடும் காட்சிகள் கல்கி படத்தின் முதல் காட்சியிலேயே வைக்கப்பட்டு அதிர்ச்சியையும் மனிதர்களின் சுயநலத்தையும் விவரித்து எச்சரிக்கிறார் நாக் அஸ்வின். பிரபாஸை காதலிக்கிறாரா திஷா பதானி?.. திடீரென முளைத்த டாட்டூவால் இப்படி மாட்டிக்கிட்டாரே! தண்ணீர் பஞ்சம்: சில வருடங்களுக்கு முன்பு வரை இலவசமாக கிடைத்து வந்த குடி தண்ணீர் இன்று பாட்டிலிலும் வாட்டர் கேன்களிலும் அடைக்கப்பட்டு பெரிய பிசினஸாக மாறி விட்டது. இன்னும் கொஞ்ச காலத்தில் அந்த தண்ணீருக்கும் பஞ்சம் வந்து விடும் என்பதையும் கல்கி படத்தில் ஆரம்பத்திலேயே காட்சிகள் வாயிலாக கடத்தி இப்படியே போனால் எதிர்கால சந்ததிக்கு குடிக்கக் கூட தண்ணீர் இருக்காது என்பதை உணர்த்தியுள்ள