சிங்கப்பூர் இறுதிபோட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து...!
16.07.2022 12:17:25
தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , ஜப்பானின் சயனா கவாகாமி ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற செட் கணக்கில் சயனா கவாகமியை வீழ்த்தி பி.வி.சிந்து இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.