அனுரவின் ஆட்சியிலும் குண்டர்கள்!
|
இரத்தினபுரி மாவட்டம் கஹவத்தை நீலகாமம் தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்தின் ஹெல்மட் குண்டர்கள், வீடில்லா மலைநாட்டு தமிழ் பிரஜை கட்டிய வீட்டை, உடைத்து, அப்பாவிகளை தாக்கியுள்ளார்கள். கோட்டாபய ஆட்சியில் இப்படியான பல சம்பவங்களை நான் நேரில் போய் நிறுத்தி உள்ளேன். இப்போது அநுர குமார ஆட்சியிலும் அதே ஹெல்மட் குண்டர்கள் இனவாத தாக்குதலா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கடும் கேள்வி எழுப்பியுள்ளார். |
|
இரத்தினபுரி – கஹவத்தை நீலகாமத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் தெரிவித்ததாவது, சட்ட விரோதமாக வீடு கட்டினார் என நிசாந்தகுமார் என்பவர் கஹவத்தை பொலிஸாரால் கைதாகி உள்ளார். சம்பவத்தில், காயமடைந்த கணேசன் விஜயகாந்த் வைத்தியசாலையில்; சேர்க்கப்பட்டுள்ளார். இரத்தினபுரியில் இருந்து கட்சியின் உபதலைவர் சந்திரகுமார் தகவல் தந்த உடன் கஹவத்த பொலிஸ் பொறுப்பதிகாரி பிரேமரத்னவை அழைத்து கடுமையாக சத்தமிட்டேன். வீட்டு பிரச்சினையை ஜனாதிபதி அநுர அரசுடன் நாம் பார்த்து கொள்கிறோம். தாக்குதல் நடத்தியவர்களை முதலில் கைது செய்யும். கைதான நிசாந்தனை பிணையில் விடுவியுங்கள் என்றேன். அதன் பின் கைதான நிசாந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசாங்க மலையக உறுப்பினர்களை இதில் தலையிடுமாறு கூறுகிறேன். நியாயம் நிலை நாட்டப்படுவற்கு கீழ் கண்ட நிலைபாடுகள் அவசியம் தோட்டங்களில் தரிசு காணிகளில், வீடில்லாதோர் தற்காலிக குடியிருப்புகள் அமைக்க உரிமை வழங்க வேண்டும். இந்த உரிமை இப்போது பெரும்பான்மை இனத்தவருக்கு மட்டும வழங்க படுகிறது. இராணுவத்தில் இருந்து விலகி வந்தவர்களை கொண்டு தோட்ட நிர்வாகங்கள் தாக்குதல்; படை அமைக்க கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கடும் கேள்வி எழுப்பியுள்ளார். |