ஜே.வி.பி. மே தினப் பேரணியை ஒன்லைனில் நடத்த முடிவு

28.04.2021 10:46:20

 

தற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக மே தினப் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜே.வி.பி. தனது மே தின நினைவுகளை ஒன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளது.

இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஒன்லைன் மூலம் மே தின பேரணி இடம்பெறும் என கூறினார்.

உழைக்கும் சமூகத்துக்காகவும், அடக்குமுறையை மேற்கொள்ளும் தலைவர்களிடமிருந்து தங்கள் உரிமைகளை கோருவதற்காகவும் மே தினம் நினைவுகூரப்படுவதாக விஜித ஹேரத் குறிப்பிட்டார்.