ஜேர்மன் தேர்தல்- வெற்றியை நோக்கி சமூக ஜனநாயக கட்சி

27.09.2021 15:50:16

ஜேர்மனியில் நடைபெற்று வரும் தேசிய தேர்தலில் இடது சாரி சித்தாந்தை பின்பற்றும் சமூக ஜனநாயக கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வலது சாரி மாற்றாக அறிவிக்கப்பட்ட சுதந்திர ஜனநாயகக் கட்சி நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 27ம் திகதி காலை நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற 299தொகுதிகளில் 25,9 விழுக்காடு வாக்கு சதவீதத்துடன் சமூக ஜனநாயக கட்சி முதலிடத்திலும், அதிபர் ஞ்சலா மெர்கேலின் யூனியன் பிளாக் கட்சி 24,1விழுக்காடு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

14.8 விழுக்காடு வாக்கு வதவீதத்துடன் சுற்றுச்சூழல் ஜனநாயகவாதிகள் மூன்றாம் இடத்திலும் வலது சாரி ஆதரவு சுதந்திர ஜனநாயக கட்சி 11.6 வீத விழுக்காடு வாக்கு சதவீதத்துடன் மூன்று மற்றும் நான்காம் இடத்தில் உள்ளனர்.

1949 ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக டென்மார்க் சிறுபான்மையினருக்கான SSW ஒருஇடத்தை வென்றுள்ளது என தகவல்கள் கூறுகின்றன.