அடுத்த பிரதமர் யார்?

11.05.2022 17:12:05

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு ஒரேயொரு தீர்வு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் அனைவரின் சம்மதத்துடன் ஒருவரை பிரதமராக நியமித்ததுடன் ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் ஆறு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டை ஆளும் புதிய வழிமுறையையும் அவர் முன்வைத்துள்ளார்.