ரஷ்யாவின் சரடோவ் விமான நிலையத்தில் விமானங்கள் பறக்க தடை.
|
உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் காரணமான ரஷ்யாவின் சரடோவ்(saratov) விமான நிலையம் தற்காலிகமாக முடங்கியுள்ளது. உக்ரைனின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக தென்மேற்கு ரஷ்யாவில் அமைந்துள்ள சரடோவ் விமான நிலையத்தில் விமான போக்குவரத்தை ரஷ்ய அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். |
|
முன்னதாக ரோசவியாட்சியா (Rosaviatsiya) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சரடோவ் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அதே நேரத்தில் அருகில் இருந்த மூலோபாய விமான தளம் அமைந்துள்ள எங்கெல்ஸ் நகரமும் உக்ரைனிய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஷ்யாவில் பல்வேறு இடங்களை குறிவைத்து மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் மீண்டும் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |