அம்பாசமுத்திரத்தில் ஜெயிச்சே ஆகணும்!.
15 வருடங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை தொடங்கிய சீமான் திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு எதிராக தமிழ் தேசியத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். எனவே திராவிட கட்சிகளுக்கு மாற்றை விரும்பியவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தனர்.
2024 பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 30 லட்சம் வாக்குகள் கிடைத்தது. கிட்டத்தட்ட 8 சதவீத வாக்குகள். ஆனால் விஜயின் அரசியல் வருகை நாம் தமிழர் கட்சியை காலி செய்துவிட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டும் நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. குறிப்பாக காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமானும் தோல்வியடைந்தார்..
இந்நிலையில்தான், விரைவில் நடைபெறவுவுள்ள அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிட போகிறேன் என சீமான் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான் ‘அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு செல்வதுதான் என்னுடைய இலக்கு.. பிற அரசியல் கட்சிகள் எனக்கு ஆதரவு அளித்தால் அதை ஏற்பேன். பிரியானி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்..
உண்மையை சொல்லப்போனால் நான்தான் பொது வேட்பாளர்.. எல்லோருக்கும் பொதுவாக இருக்கிற ஒரு கட்சி.. ஒரு வேட்பாளர் அது நாம் தமிழர் கட்சி வேட்பாளர்தான்..
அம்பாசமுத்திரத்தில் வெற்றி பெற வேண்டும் என நாங்கள் தீவிரமாக வேலை செய்வோம். வெறியோடு இருக்கிறோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.