160 ஒமிக்ரோன் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை சுகாதார அமைச்சின் குறைபாடு

17.01.2022 04:18:09

நாட்டில் புதிதாக 160 ஒமிக்ரோன் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை சுகாதார அமைச்சின் குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது என சுகாதார தொழில்சார் துறையினர் சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பயணிகளிற்கு சோதனைகளை மேற்கொள்வது நாட்டிற்கு சுமையாக மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வந்த பலர் பாதிக்கப்பட்டிருப்பது நாட்டிலிருந்து அவர்கள் வெளியேறும்போதே தெரியவருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்ட பலர் நாட்டிற்குள் நுழைகின்றனர் என்ற முடிவிற்கு வரமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்றும் ஆனால் அரசாங்கம் நாட்டிற்குள் நுழைபவர்களை சோதனையிடுவதை நிறுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்காலத்தில் மிகவும் கடினமான தனிமைப்படுத்தல் நடவடிக்கைளை முன்னெடுக்கவேண்டிவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.