நாளை முதல் யாழ்தேவி ரயில் சேவை!
10.05.2026 14:54:10
|
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி ரயில் நாளை (11) முதல் மீண்டும் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. |
|
அதன்படி, திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி ரயில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கான யாழ்தேவி ரயில் சேவை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மாத்திரம் இடம்பெறும். இந்த ரயில் குளிரூட்டப்பட்ட 04 முதலாம் வகுப்பு பெட்டிகளைக் கொண்டதாகும். ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக அல்லது ஆசன முன்பதிவு வசதி கொண்ட ரயில் நிலையங்களுக்குச் சென்று பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும். |