பா.ம.கவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

11.03.2021 09:10:31

பா.ம.க சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 19 வேட்பாளர்களின் பெயர்கள் இரண்டு கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பென்னாகரத்தில் ஜி.கே. மணி, ஆத்தூரில் திலகபாமா, ஜெயங்கொண்டத்தில் வழக்கறிஞர் பாலு, சேலம் மேற்கு தொகுதியில் அருள் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இதுதவிர கீழ்பென்னாத்தூரில் செல்வகுமார், திருப்போரூரில் திருக்கச்சூர் ஆறுமுகம், ஆற்காட்டில் இளவழகன், திருப்பத்தூரில் டி.கே. ராஜா, தருமபுரியில் வெங்கடேஸ்வரன், செஞ்சியில் ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் மயிலாடுதுறையில் பழனிசாமி, விருத்தாசலத்தில் கார்த்திகேயன், சேப்பாக்கத்தில் கஸ்ஸாலி, நெய்வேலியில் ஜெகன், கும்மிடிப்பூண்டியில் பிரகாஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சோளிங்கரில் கிருஷ்ணன், கீழ்வேளூரில் முகுந்தன், காஞ்சிபுரத்தில் மகேஷ்குமார்,  மைலம் தொகுதியில் சிவக்குமார் ஆகியோர் போட்டியிட உள்ளதாக இரண்டாம் கட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.