கொழும்பில் வசிப்பவர்களுக்கு இன்றும் தடுப்பூசி
10.08.2021 06:12:10
மேல்மாகாணத்தில், எந்தவொரு தடுப்பூசியும் இதுவரை செலுத்தப்படாத 60வயதுக்கு மேற்பட்ட மற்றும் தீவிர நோய்களினால் பீடிக்கப்பட்டு உள்ளோருக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று முதல் மூன்று தினங்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
1906 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முன்பதிவினை மேற்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.