கரிநாள் பேரணி.
02.02.2026 14:29:18
|
நாளை மறுதினம் 4ஆம் திகதி 78ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த நாளை கரிநாள் என பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. |
|
யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர்கள் இதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். |