எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்

01.12.2021 10:13:00

 

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் கடந்த சில வருடங்களாக எயிட்ஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று உலக எயிட்ஸ் தினம். அதனை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுங்கள், எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்´ என்பதுதான் இந்த ஆண்டு எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருளாகும். 2020 ஆம் ஆண்டில், நாட்டில் 363 புதிய எய்ட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டதாகவும் 2019 இல் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 439 ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கையில் இம்முறை சமத்துவமின்மையை ஒழிப்போம், எயிட்ஸ்சை ஒழிப்போம், பெருந்தொற்றை ஒழிப்போம் எனும் தொணிப்பொருளில் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இதனையடுத்து எயிட்நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று வவுனியா பொதுவைத்தியசாலையின் மாவட்ட பாலியல் நோய்தடுப்பு தடுப்புபிரிவின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது.

வவுனியா பொது வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் குருமன்காட்டுசந்தி ஊடாக, வைரவபுளியங்குளம் சென்று, வவுனியா நகரம் ஊடாக மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தது. இவ்விழிப்புனர்வு ஊர்வலத்தில் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், சுகாதாரதிணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வாராந்த ஒன்றுகூடலில் உலக எச்.ஐ.வி/எயிட்ஸ் தினமான இன்று அது தொடர்பான விழிப்புணர்வு இன்று  நடைபெற்றது.