சொந்த நாட்டில் அளிக்கப்பட்ட அமோக வரவேற்பு!

21.12.2022 16:36:14

மிக விறுவிறுப்பாக நடைபெற்ற கத்தார் பிபா உலகக்கிண்ண போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன.

இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்த அர்ஜென்டினா அணிக்கு சொந்த நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்தவகையில், சாதனை படைத்த மொரோக்கோ அணி தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பிய நிலையில் அங்கு கடுமையான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

சாதனை படைத்த மொரோக்கோ அணி

உலகக்கிண்ண வரலாற்றில் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்த முதலாவது ஆப்பிரிக்கா அணியாக மொரோக்கோ அணி சாதனை படைத்திருந்தது.

மொரோக்கோவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்றுகூடி சாதனை படைத்த மொரோக்கோ அணி வீரர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை உலகக்கிண்ணப் போட்டிகளில் மக்கள் மனங்களை வென்ற சிறந்த அணியாக மொரோக்கோ அணி இருந்தமை குறிப்பிடத்தக்கது.