இறக்குமதியாகும் பெரிய வெங்காயத்துக்கு 40 ரூபா வரி!
07.09.2021 09:26:40
இறக்குமதியாகும் பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கு 40 ரூபா இறக்குமதி வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த வரி இன்று (07) நள்ளிரவு முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பெரிய வெங்காய உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.