37 நாட்களாக அனல் பறந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு!
|
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சி தலைவர்கள் பிரசார பொதுகூட்டங்களை நடத்தக்கூடாது. ரோடு ஷோவில் ஈடுபடக் கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரப்புரையில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. |
|
கடந்த மார்ச் 15 ஆம் தேதி தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியினை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார். அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். பரப்புரை, ரோடு ஷோ என அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டனர். கடந்த 37 நாட்களாக சூடு பறக்க நடந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. பிரசாரம் ஓய்ந்த பிறகு அரசியல் கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டங்களிலோ, ரோடு ஷோவிலோ ஈடுபடக் கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரப்புரை ஈடுபட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக எந்தவித பொதுக்கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. என்னென்ன கட்டுப்பாடுகள் தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்-அப், முகநூல், எக்ஸ் உள்ளிட்ட எந்த சாதனம் மூலம் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும். Powered By 4 வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்பட வாகன அனுமதிகள், இன்று மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும். 2 நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது. |