ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து.
01.08.2026 09:57:58
2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பத்திரகேவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ருமேஷ் தரங்கவின் வெற்றி நாட்டின் பொன்னான கனவை நனவாக்கிய பெருமைமிக்க தருணம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் நீங்கள் வென்ற தங்கப் பதக்கத்திற்காக மனமார்ந்த வாழ்த்துகள்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.