டேல் ஸ்டைன்- அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்
தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் 38, அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். 17 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில், 93 டெஸ்ட்(439 விக்.,), 125 ஒருநாள் போட்டி(196 விக்.,), 47 ‘டுவென்டி – 20' போட்டிகளில்(64 விக்.,) பங்கேற்றுள்ளார். ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு உட்பட சில அணிகளுக்காக விளையாடியுள்ளார். பந்துகளை நன்கு ‘ஸ்விங்’ செய்யும் இவர், துல்லிய ‘யார்க்கர்’ வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்
இவர் வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில், ‘எனக்கு பிடித்த விளையாட்டில் இருந்து அதிகாரப்பூர்மாக ஓய்வு பெறுகிறேன். கிரிக்கெட் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், சக வீரர்கள், ரசகிர்களுக்கு நன்றி. சிறந்த பயணமாக அமைந்தது' என தெரிவித்துள்ளார்.
இவரது ஓய்வு வாழ்க்கை சிறப்பாக அமைய, தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸ், இந்தியாவின் சேவக், லட்சுமணன் உள்ளிட்ட பலரும் வாழ்த்தியுள்ளனர்.