இளம் வாக்காளர்களின் ஆதரவை நாமல் பெறுவார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அந்த மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் ஆதரவைத் திரட்டக்கூடிய தலைவர் ஆவார் என பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கீதநாத்காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தவுடன் வடக்கு, கிழக்கில் மக்களின் குறைகளை ஆராய முதன் முதலாக விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் நாமல் ராஜபக்ஷவும் ஒருவர் எனவும், பிரதேசத்தின் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து ஆழமான புரிதலை அவர் பெற்றுள்ளதாகவும் காசிலிங்கம் தெரிவித்தார்.
இதேவேளை முன்னைய எந்த வேட்பாளர்களை விடவும் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து, குறிப்பாக மாற்றத்தை விரும்பும் இளம் வாக்காளர்களின் ஆதரவை நாமல் பெறுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.