குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை.

18.03.2026 14:13:26

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளைய தினம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்படவுள்ளது.எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையே இவ்வாறு கையளிக்கப்படவுள்ளது.

தரமற்ற நிலக்கரி விவகாரத்தை முன்னிலைப்படுத்தி, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியின் 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கையொப்பமிட்டுள்ளனர்.

இதன்படி குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை நாளை சபாநாயகரிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.