கட்டுப்பாடு திருத்தப்பட்டு மீண்டும் வெளியானது

19.08.2021 09:36:46

கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சினால் ​இன்று பிற்பகல் வௌியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட வழிகாட்டலில், வணிக வளாகங்கள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை முழுமையாக மூடப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், வணிக வளாகங்கள் 25 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக புதிய திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.