ஆலயங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தத் தடை!

26.08.2025 08:16:11

கேரளாவில்  ஆலயங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு  தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது குறித்து நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவில் கேரளாவில் கோயில்களில் அன்றாட நிகழ்ச்சிகள் தவிர அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும், குறிப்பாக கோயில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, கட்சி மற்றும் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது  எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் மத நிறுவனங்களை துஷ்பிரயோகம் செய்யும் செயல்களை தடுக்க வகுக்கப்பட்ட 1988-ம் ஆண்டு சட்டங்களை பின்பற்றுவதை  கோயில் நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.