பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் முன்னையதை விட ஆபத்தானது!
04.07.2026 14:28:57
|
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் ஏற்கனவே கண்டறியப்பட்ட குறைபாடுகளை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன், அவற்றை மேலும் விரிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளது. |
|
அதேவேளையில், இந்த புதிய சட்டமூலமானது மேலும் பல புதிய அபாயங்களையும் கவலைகளையும் தோற்றுவிப்பதாக அமைந்துள்ளதாகவும் அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் புதிய சட்டம் உருவாக்கப்படும் வரையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்தவும் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. |