ஜோர்ஜியா குடியரசு தலைவரின் அதிரடி முடிவு
ஐரோப்பியாவுடன் இணைவது தொடர்பான முடிவை அறிவித்ததை அடுத்து ஜோர்ஜியா நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பு ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடியுள்ளனர். ஐரோப்பிய ஒருங்கிணைவை ஜோர்ஜியா அதிகாரப்பூர்வமாக கைவிடுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஜோர்ஜியாவின் பிரதமர் இராக்லி கோபாகிட்ஸே( Irakli Kobakhidze) தெரிவித்துள்ளார், அதில் ஜோர்ஜியா 2028ம் ஆண்டு வரை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையை மறுப்பதாக தெரிவித்துள்ளார். |
இதற்கிடையில், ஜோர்ஜிய நாடாளுமன்ற முடிவுகள் மீது அங்கீகரிக்காத தீர்மானத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டு இருப்பதுடன், “ஜோர்ஜிய கனவு” தலைவர்கள் மீதான பொருளாதாரத் தடைகளையும் கோரியுள்ளது. அதே சமயம் ஜோர்ஜியா ஜனாதிபதி சலோமி ஜுராபிஷ்விலி தன்னை நாட்டின் நிரந்தர தலைவராக அறிவித்துள்ளார். அத்துடன் ஜோர்ஜியாவின் ஒரே பிரதிநிதியாக உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஒரே உரிமை தனக்கு மட்டும் தான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய இறுதி வரை தான் மட்டும் தான் நாட்டின் தலைவர் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஐரோப்பாவுடன் இணைவது தொடர்பான முடிவு மற்றும் நாடாளுமன்ற அதிகாரிகளின் முடிவுகள் காரணமாக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திபிலிசியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பு திரண்டு வருகின்றன. |