கோப் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் விசேட நாடாளுமன்ற விவாதம்
10.10.2021 05:37:16
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் விசேட நாடாளுமன்ற விவாதத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கோப் குழுவினால் கடந்த நாட்களில் முன்வைக்கப்பட்ட சில அறிக்கைகள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மீள நாடாளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.