இந்திய சினிமா அளவில் முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுபவர் மணிரத்னம். இவர் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. அதேநேரம், அடுத்து கமலை வைத்து அவர் இயக்கிய தக் லைப் திரைப்படம் வெற்றியை பெறவில்லை. அதன்பின் விஜய் சேதுபதி, சாய் பல்லவி இருவரையும் வைத்து இஞ்சி வெல்லம் என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்த படம் ஜனவரி மாதம் வெளியாகும் என்கிறார்கள்.
தற்போது மணிரத்னம் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டாராம். மீண்டும் இரு நடிகர்களை வைத்து ஒரு புதிய படத்தை அவர் இயக்க திட்டமிட்டிருக்கிறாராம். சூர்யா மற்றும் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
சூர்யாவின் சீன் படத்திற்காக தனுஷ் தனது ஓம் படத்தின் ரிலீஸையே தள்ளி வைத்தார். இதற்காக சூர்யாவும் தனுஷுக்கு நன்றி சொன்னார். எனவே, இருவரும் இணைந்து நடிக்க நிறைய வாய்ப்பிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.