90வயது வரை உயர்த்தினால் வழக்குகளை விசாரிக்கத் தயார்!

17.08.2026 09:21:00

உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வூதியக் காலத்தை நீடிப்பது ஒரு நல்ல விஷயம் எனத் தெரிவித்துள்ள மக்கள் தேசிய கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணத்தின் முன்னாள் அமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 90 ஆக உயர்த்தினால் தாமும் மீண்டும் வழக்குகளை விசாரிக்கத் தயார் என தெரிவித்துள்ளார்.