ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி..!

17.09.2022 00:06:00

சிறிலங்காவிற்கு 22.83 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் 18.75 மில்லியன் யூரோவையும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் நிலையான தொழில்துறை அபிவிருத்திக்காக குறித்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரெனே வான் பெர்கல்

ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் இலங்கை பிரதிநிதி கலாநிதி ரெனே வான் பெர்கல் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.