மோடி புத்திசாலி!. பாராட்டிய டிரம்ப்!...

20.06.2026 15:03:47

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பொறுத்தவரை திடீரென ஒரு நாட்டின் பிரதமரை பாராட்டுவார்.. திடீரென ஒரு நாட்டின் பிரதமரை முட்டாள் என்பார். அது அவரின் மனநிலையை பொறுத்தது.  கடந்த ஒரு வருடமாகவே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை.

இந்திய பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு பல மடங்கு வரிகளை விதித்தார் டிரம்ப். ஆனால் அது செல்லாது என அமெரிக்கா உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதன் பின் இந்தியாவுக்கான வரிகளை டிரம்ப் குறைத்தார். மேலும் ‘ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கமா இருக்கக் கூடாது, ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்க கூடாது’ என்றெல்லாம் டிரம்ப் கண்டிஷன் போட்டார்..

இந்நிலையில்தான், சமீபத்தில் ஜீ7 உச்சி மாநாட்டின் போது மோடியும் டிரம்ப்பும் சந்தித்து உரையாடினார்கள்.  இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப் ‘
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறந்த தலைவர். அவர் போர்களை விரும்புவதில்லை. எனவே அதிலிருந்து விலகியே இருக்கிறார்.. எந்த போரிலும் சிக்காமல் நாட்டை அமைதியாக வழி நடத்துகிறார். அவர்கள் இந்த அணுகுமுறை மிகவும் புத்திசாலித்தனமானது.

உண்மையில் இந்தியாதான் பெரிய நாடு. 1.5 பில்லியன் மக்களின் பிரதிநிதி அவர். இந்தியாவில் இதற்கு முன்பு பிரதமர்கள் மாறிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் மோடி பொறுப்பேற்று 12 வருடங்களுக்கு மேலாக நிலையான ஆட்சியை கொடுத்து வருகிறார். அவர் அமைதியாக இருந்தாலும் கொள்கைகளில் கண்டிப்பாக இருக்கும் வலிமையான தலைவர் அவர்’ என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.