முன்னுரிமை அடிப்படையில் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கொரோனா தடுப்பூசி !

05.03.2021 07:53:54

 

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில் ”தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. கட்டாயம் கிடையாது. அவர்கள் விருப்பப்பட்டால்  முன்னுரிமை அடிப்படையில்  கொரோனா தடுப்பூசி போடப்படும் ” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என  மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.