இந்தியப் பெண்மணிக்கு ஜேர்மனியின் உயரிய விருது

03.12.2021 09:56:33

 

இந்தியாவில், ஜேர்மன் மொழித்துறையில் தலைவராக பணியாற்றும் ஒரு பெண்மணிக்கு ஜேர்மனியின் உயரிய விருதொன்று வழங்கப்பட்டுள்ளது.

Deccan Education Society என்ற கல்வி அமைப்பில், முதல் பெண் ஆயுள் உறுப்பினரும், ஜேர்மன் மொழித்துறையில் தலைவராக பணியாற்றுபவருமான பேராசிரியர் சவிதா கேல்கர் (Savita Kelkar) என்பவரே இந்த உயரிய கௌரவத்தை பெற்ற பெண்மணி ஆவார்.

இந்தியாவுக்கான ஜேர்மன் தூதரக அலுவலரான Jürgen Morhard முன்னிலையில் சவிதாவுக்கு, Order of Merit of the Federal Republic of Germany என்ற விருது வழங்கப்பட்டது.

விருதைப் பெற்றுக்கொண்ட சவிதா, தான் அதை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும், தான் அந்த விருதால் கௌரவம் அடைந்துள்ளதாகவும், தனக்கு எப்போதுமே மொழி மற்றும் கலாசாரத்தின்மீது பெரும் ஈடுபாடு உண்டு என்றும், இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு பாலமாக இருப்பதற்காக தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.