கொரோனாவிலிருந்து மீண்ட ஜான்வி, குஷி

12.01.2022 05:36:33

மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியரின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர். ஜான்வியில் ஹிந்தியில் நடிகையாக உள்ளார். குஷியும் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதுப்பற்றி ஜான்வி கூறுகையில், ‛‛நானும், எனது சகோதரியும் ஜன.,3 அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோம். அதன்பின் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்றோம். இப்போது நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. முதல் இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டோம்.

அடுத்தடுத்த நாட்களில் குணமாக தொடங்கியது. இந்த வைரஸில் இருந்து தடுப்பூசியும், முகக்கவசமும் தான் நம்மை காக்கும். அனைவரும் கவனமாக இருங்கள்'' என்றார்.