ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் !
09.07.2022 09:34:09
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று நோவக் ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரித்தானியாவின் கேமரூன் நோரியை எதிர்கொண்டார்.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், நோவக் ஜோகோவிச், 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், நோவக் ஜோகோவிச், அவுஸ்ரேலியாவின் நிக் கிர்கியோசை எதிர்கொள்ளவுள்ளார்.