இலங்கை தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்குமாறு வலியுறுத்து!

06.11.2025 14:52:02

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வசித்து வரும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வாக்களிக்கும் உரிமையும், முழுமையான குடியுரிமை சலுகைகளை வழங்குமாறு பாட்டாளி மக்கள் கட்சி (PMK) நிறுவனர் எஸ். ராமதாஸ் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக நேற்று (04) அவர் வெளி​யிட்ட அறிக்​கையில், 

இலங்​கையில் 1983 ஆம் ஆண்டு நடந்த போர் காரணமாக​வும் பல்​வேறு கால​கட்டங்​களி​லும் பல்​லா​யிரக்​கணக்கான இலங்கை தமிழர்​கள் தமிழகத்துக்கு அடைக்​கலம் வந்தனர். 

உலகின் பல நாடு​கள் இலங்கை தமிழர்​களுக்கு குடி​யுரிமை வழங்​கி​யுள்​ளன. 

இந்​தி​யா​வில்​தான் இலங்கை தமிழ் மக்​கள் அகதி முகாம்​களி​லேயே ஆயுள் முழுதும் வாழ்ந்து முடிக்​கிறார்​கள்.

தற்​போதைய தலை​முறை​யா​வது சுதந்​திர​மாக வாழ வேண்டும். 

 

அதற்கு முதல்​கட்​ட​மாக தமிழகத்​தில் தற்​போது தொடங்​க​வுள்ள தீவிர வாக்​காளர் திருத்த பணி​யின் போது தமிழகத்​தில் வசிக்​கும் இலங்க‍ை ​தமிழர்​களுக்​கு வாக்​குரிமை அளிக்க வேண்​டும். 

இதற்கு மத்​திய, மாநில அரசுகள் நடவைக்கை எடுக்க வேண்​டும் – என வலியுத்தினார்.