ஜெனிவாவில் 9ஆம் திகதி இலங்கை குறித்த விவாதம்!
ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது அமர்வு செப்டம்பர்9 இல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினமே இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. |
அமர்வின் நிகழ்ச்சி இலக்கம் 2 இன் கீழ் இலங்கை விவகாரம் பட்டியலிடப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான ஐ. நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பின்னர் அறிக்கை தொடர்பான ஊடாடும் உரையாடல் இடம்பெறும். பேரவையின் தீர்மானம் 51/1 இந்த பிரகாரம் , மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் அலுவலகம் தகவல்களை சேகரிக்கவும், ஒருங்கிணைக்கவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் பாதுகாக்கவும், அதன் அதன் கண்காணிப்பை மேம்படுத்தவும் அதன் ஆற்றலை நீடித்து வலுப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் மற்றும் மனித உரிமைகள் மீதான பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் தாக்கம் உட்பட இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமை பற்றிய கண்காணிப்பை அதிகரிக்குமாறும் அலுவலகத்திடம் கோரப்பட்டது. 57ஆவது அமர்வில் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான கூடுதல் விருப்பங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும் பேரவை ஆணை வழங்கியிருந்தது. இதன்பிரகாரம் இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை |