இலங்கை மற்றும் பங்களாதேஷ் - வயிட் வோஷை தடுக்குமா இலங்கை ?
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
உள்ளூர் நேரப்படி மதியம் 12.30மணிக்கு டாக்கா மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணிக்கு குசல் ஜனித் பெரேராவும் பங்களாதேஷ் அணிக்கு டமீம் இக்பாலும் தலைமை தாங்கவுள்ளனர்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் டக்வத் லுயிஸ் முறைப்படி 103 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
ஆகவே ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய பங்களாதேஷ் அணி, உலகக்கிண்ண சுப்பர் லீக் தொடரில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று இலங்கை அணியை வயிட் வோஷ் செய்யும் முனைப்பில் பங்களாதேஷ் அணியும், இறுதி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று ஆறுதல் அடையும் ஆர்வத்தில் இலங்கை அணியும் களமிறங்கவுள்ளது.