சிறிலங்காவின் போக்கு - ஐரோப்பிய ஒன்றியம் கவலை!

29.10.2022 15:14:28

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமன்றி பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளமை குறித்தும் ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட குழுவினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட குழுவினர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

 

இந்த விஜயத்தின் போது, ஆணைக்குழுவிற்கு பூரண ஆதரவை வழங்க தயாராகவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரிகளை இன்று சந்தித்து மேலதிக பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் இலங்கை மனித ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த விஜயத்தின் போது, இலங்கை தற்சமயம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தமது கரிசனையை வெளியிட்டுள்ளனர். 

இதுதவிர, பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளமை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைதியான போராட்டம் குறித்த விசாரணைகள் தொடர்பில், அவதானம் செலுத்தப்பட்டதுடன், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.