பயணக்கட்டுப்பாடு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது: பிரசன்ன ரணதுங்க
25.08.2021 09:06:23
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தர முடியும் என அவர் கூறினார்.
Bio-bubble திட்டத்தினூடாக தெரிவு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாத்திரமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
சுற்றுலா பயணிகள் தங்களுக்கான ஹோட்டல்களுக்கு அறிவித்து, தாம் தங்குவதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக்கொள்தல் வேண்டும்.
அதற்கமைய, வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தர எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.