மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவி?
08.12.2025 14:05:17
|
சாய் பல்லவி என்றாலே அவரது ஹோம்லி லுக் மற்றும் படங்கள் தான் நினைவுக்கு வரும். கடந்த வருடம் வந்த அமரன் படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் அதிகம் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ரஜினி - கமல் இணையும் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருப்பதாக சமீபத்தில் செய்தி பரவியது. ஆனால் அது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. |
|
இந்நிலையில் நடிகை சாய் பல்லவி அடுத்து மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அவர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சாய் பல்லவி இந்த ரோலுக்காக போட்டோஷூட்டில் பங்கேற்று இருந்தாராம். 2026 ஜனவரியில் படம் பற்றிய அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதம் தான் தொடங்கும் என தெரிகிறது. |