புதிய முறையில் இடம்பெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை - வெளியான அறிவிப்பு

22.10.2022 15:28:48

நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையை நடத்தும் முறைமையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் இரண்டாவது வினாத்தாளை முதலிலும் முதலாவது வினாத்தாளை இரண்டாவதாகவும் வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

புதிய முறையில் இடம்பெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை - வெளியான அறிவிப்பு | Change System Conducting Scholarship Examination

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் கடந்த ஆண்டு நேர அட்டவணை சம்பந்தமாக விரிவாக ஆராய்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி நடத்த பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சையை காலை 9.30 முதல் 10.45 வரை ஒரு மணி 45 நிமிடங்களும், முதலாம் வினாத்தாளுக்கான பரீட்சையை முற்பகல் 11.15 முதல் மதியம் 12.15 வரை ஒரு மணி நேரமும் நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.