பிரதமரை அவசரமாக சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

29.04.2021 11:15:42

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இன்று முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயத்தை நிறைவு செய்த பின்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவசரமாக சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.