இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்த கார்த்திக் சுப்பராஜ்!

19.05.2026 07:41:24

பிட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இதன்பின், ஜிகர்தண்டா படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தினார். இதனை தொடர்ந்து இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெட்ரோ என இதுவரை 9 படங்களை இயக்கியுள்ளார். இயக்குநராக மட்டுமின்றி பல நல்ல திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில், தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் 10-வது திரைப்படம் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்துள்ளார். இது இளையராஜாவிற்கு 1540-வது திரைப்படமாகும். இதற்கான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.