சட்டவிரோத மதுபானங்களுடன் ஒருவர் கைது
23.08.2021 05:36:26
மட்டக்களப்பு திமிலைதீவில் ஊரடங்கு வேளையில் சட்டவிரோதமாக அரச மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை 275 மதுபான போத்தல்களுடன் நேற்று (22) மாலை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட அரச மதுபானங்களை மதுவரி திணைக்களத்திடம் ஓப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவரை இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.