தமிழ் உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல்
17.02.2021 09:36:54
ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்களை, கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் எவ்வாறு சக்திமிக்கதாக மாற்றுவது மற்றும் மலையக பகுதிகளில் உள்ள தமிழ் மக்களை கட்சிக்குள் உள்வாங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.