4 மாணவர்களுக்கு களனி பல்கலைக்கழகத்தில் கொரோனா- பல்கலை.நிர்வாகத்தின் மீது அதிருப்தி வெளியிட்டுள்ள மாணவர் சங்கம்

28.04.2021 10:38:52

களனி பல்கலைக்கழக அறிவியல் பீடத்தின் நான்கு மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழக அறிவியல் பீட மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,  பல்கலைக்கழகத்தின் முதலாண்டு தேர்வுகளுக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் குழுவில் சிலர், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏனைய மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என கூறப்பட்டபோதிலும் ,  தனிமைப்படுத்தல் செயல்முறை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறு மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நிர்வாகத்தின் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மேலும் நிர்வாகத்தின் தன்னிச்சையான முடிவுகள் சமூகத்தில் அதிக கொரோனா பரவும் நிலைமை காணப்படுகின்றன என களனி பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீட மாணவர் சங்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.