யாழ் மாநகர சபையின் அமர்வு இன்று வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது
19.08.2021 16:16:55
யாழ் மாநகர சபையின் அமர்வு இன்றையதினம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாநகரசபை ஆளுகைக்குட்பட்ட பகுதியில் விளம்பரப்பதாதை அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடடிக்கை தொடர்பில் உறுப்பினர்களால் முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இறுதியில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக மாநகர சபை உறுப்பினர்களில் இருந்து 5 பேர் கொண்ட குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் தனியார் நிறுவனத்தினால் யாழ் வரவேற்கிறது என்ற விளம்பர பலகை அமைப்பதற்கான நடவடிக்கை அண்மையில் முன்னெடுத்தமை தொடர்பிலேயே இன்றையதினம் விவாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.