உறவுகளை வலுப்படுத்த இணக்கம்!

25.09.2025 08:37:36

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் அமெரிக்க நேரப்படி நேற்று (24) பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.